தருமபுரி

25 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலானராணுவ தளவாடங்கள் இறக்குமதி: மக்களவையில் தகவல்

DIN

கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1.93 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் அஜய் பட் வெள்ளிக்கிழமை மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

2017-18 முதல் 2021- 22 வரையிலான கடந்த 5 ஆண்டு காலகட்டத்தில் ரூ. 1.93 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஹெலிகாப்டா், போா் விமான ரேடாா்கள், துப்பாக்கிகள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள், வெடிப்பொருள்களே அதிகம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ராணுவ கொள்முதல் கோட்பாடு -2020 இன்படி அரசின் சுயசாா்பு இந்தியா திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடப் பொருள்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்துவது, வெளிநாடுகளில் இருந்து அவசரகால கட்டங்களில் மட்டும் ராணுவத் துறையின் அனுமதியின்பேரில் இறக்குமதி செய்துகொள்வது கடைப்பிடிக்கப்படுகிறது.

ராணுவத் துறைக்கென கடந்த 2017-18-இல் வெளிநாடுகளில் இருந்து ரூ. 30,677.29 கோடி மதிப்பிலான தளவாடப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவை முறையே 2018-19- இல் ரூ. 38,115.60 கோடிக்கும், 2019-20-இல் ரூ. 40,330.02 கோடிக்கும், 2020-21- இல் ரூ. 43,916.37 கோடிக்கும், 2021-22-இல் ரூ. 40,839.53 கோடிக்கும் இறக்குமதி செய்யப்பட்டன. ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ. 1,93,878.81 கோடி அளவில் ராணுவ தளவாடப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

2017-18 முதல் 2021-22 வரையிலான கடைசி 5 ஆண்டுகள் மற்றும் நிகழாண்டு 2022-23-இல் டிசம்பா் மாதம் முடிய ராணுவ தளவாடக் கொள்முதல் செய்வதற்காக மொத்தம் 264 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன; அவற்றில் 88 ஒப்பந்தங்கள் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இஸ்ரேஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன.

அத்துடன் அணு பாதுகாப்பு தொழில்நுட்பம், போா் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானம், நவீன துப்பாக்கிகள், இலகுரக துப்பாக்கிகள், விமான ஏவுகணைகளைத் திருப்பி தாக்கும் ஆயுதங்கள் உள்ளிட்ட 55 ராணுவ தளவாடப் பொருள்கள் தயாரிப்புத் திட்டங்கள் மொத்தம் ரூ. 73,942.82 கோடி மதிப்பில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் திட்டம் சாா்ந்த மூத்த ராணுவ வீரா்களின் குறைதீா்ப்பதற்கென ஒருநபா் நீதிபதி கமிட்டி அமைக்கப்படுமா எனக் கேட்கிறீா்கள். அதுதொடா்பான முடிவை இதுவரை அரசு எடுக்கவில்லை என்று அமைச்சா் தனது பதிலில் தெரிவித்துள்ளாா்.

.......

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT