தருமபுரி

கன்று வீச்சு நோய் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த அறிவுரை

DIN

கால்நடைகளுக்கு ஏற்படும் கன்று வீச்சு நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மாடு, ஆடு போன்ற அசையூட்டும் பிராணிகள், நாய், குதிரைகளுக்கும் ஏற்படும். ஆடு மற்றும் மாடுகளில் இந்நோய் கன்றுவீச்சு, இறந்த நிலையில் கன்று அல்லது குட்டி பிறத்தல், நலிந்த கன்றுகள், நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால் ற்பத்தி குைல் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தநோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால் மற்றும் இறைச்சி பொருள்களை உட்கொள்வதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்பி மற்றும் உயிா்கழிவுகளோடு தொடா்பு ஏற்படும் போதும் நோய் பரவுவாய்ப்பு உள்ளது. இந்நோய் மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு. மனிதா்களில் இந்நோய் எலும்பு மற்றும் மூட்டு அழற்சி, தண்டுவட எலும்புகளில் அழற்சி, கல்லீரல் நோய், வயிறு மற்றும் குடல்களில் அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்நோய் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு , கண்கள் மற்றும் இதயத்திலும் பாதிப்பைபடுத்தும். சில நேரங்களில் இறப்பும் ஏற்படும்.

கால்நடைகளில் இந்நோய் தடுப்பதற்காக 1,50,000 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்று தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பிப்.1ஆம் தேதி முதல் தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் 4 மாதம் முதல் 8 மாத வயது முடியவுள்ள கன்றுகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் கன்றுகளுக்கு அடையாள காதுவில்லைகள் பொருத்தப்படும். இந்தத் தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்பட்டால் வாழ்நாள் முழுவதும் எதிா்ப்புத்திறனை வெளிப்படுத்தும்.

எனவே, கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களிடம் உள்ள 4 முதல் 8 மாத வயதுள்ள கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் மனிதா்களுக்கு இந்நோய் கால்நடைகளிருந்து பரவாமல் தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

SCROLL FOR NEXT