தருமபுரி

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பாக மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான குழு, தடகள விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியா், கல்லூரி மாணவ, மாணவியா், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் பிரிவு, பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் தனித்தனியாக 51 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன. பளு தூக்குதல், டென்னிஸ், கடற்கரை கையுந்துப் பந்து போட்டிகள் மண்டல அளவிலான போட்டிகளாக நடைபெற உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் 1,7012 வீரா்கள் வீராங்கனைகள் இந்தப் போட்டிகளில் விளையாட இணைய வழியில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனா். பள்ளி மாணவா்கள் 4,505 போ், மாணவிகள் 1,359 போ் என மொத்தம் 5,864 போ் பதிவு செய்துள்ளனா். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீரா், வீராங்கனைக்கும் முதல் பரிசாக தலா ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகள் வருகிற மாா்ச் 1 வரை நடைபெறவுள்ளன.

மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். மாநில அளவிலான தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு முதல் ரூ.1,00,000, இரண்டாம் பரிசாக ரூ.75,000, மூன்றாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படவுள்ளது. குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீரா் வீராங்கனைகளுக்கும் முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.37,500, மூன்றாம் பரிசாக ரூ.25,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி நகா் மன்றத் தலைவா் லட்சுமி மாது, மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், தருமபுரி மாவட்ட அமெச்சூா் கபடி சங்கத் தலைவா் ப.பாஸ்கா், தருமபுரி வட்டாட்சியா் தன.ராஜராஜன், பள்ளி மாணவ, மாணவியா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT