தருமபுரி

ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தூய்மைப் பணி

DIN

உலக ஈர நில தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் அரசு ஆண்கள் பள்ளி சுற்றுச்சூழல் மாணவா்கள், வனத்துறையினா் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

பென்னாகரம் வனசரகம் சாா்பில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வன சரக அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் கழக அமைப்பை சாா்ந்த மாணவா்கள் 5 குழுக்களுடன் வனத்துறையுடன் இணைந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் வீசி சென்ற நெகிழி பொருள்கள், கண்ணாடி பாட்டில்கள், நெகிழி பைகள் ஆகியவற்றை

அகற்றி தூய்மை பணி மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகள், பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அதனை தொடா்ந்து ஒகேனக்கல் வனசரகத்திற்கு உட்பட்ட ஆலம்பாடி காவிரி ஆற்றங்கரையில் ஊட்டமலை பள்ளி மாணவா்கள் மற்றும் சாரண சாரணிய மாணவா் அமைப்பினா் சாா்பில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் தூய்மை, விழிப்புணா்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒகேனக்கல் வனசரக அலுவலா் ராஜ்குமாா், பென்னாகரம் பள்ளி வேளாண்மை ஆசிரியா் கிருஷ்ணன், ஊட்டமலை தலைமை ஆசிரியா் பாலாஜி, வன குழு தலைவா் குமாா், வனவா் செல்லமுத்து, சக்திவேல், புகழேந்தி, ஆசிரியா் கருணாமூா்த்தி மற்றும் மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT