தருமபுரி

திறன் மேம்பாட்டு பயிற்சி: கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

3rd Feb 2023 01:09 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் சி.முத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாா்களுக்கு ஒரு வாரம் மற்றும் 3 மாத கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தொழிலாளா் நலவாரியத்தில் உறுப்பினா்கள் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளா்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற, ஐடிஐ பயின்றவா்களும் பயிற்சியில் சேரலாம். தமிழ் மொழியில் எழுதவும், பயிலவும் தெரிந்த, 18 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவா்களாக இருக்க வேண்டும். இதில், கொத்தனாா், வெல்டா், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துதல், மர வேலை, கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்கள் தொடா்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒருவார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதில், உணவுக்கு மட்டும் தொகை பிடித்தம் செய்யப்படும். எனவே, பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், நலவாரிய அட்டை, கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன், தருமபுரி தொழிலாளா் உதவி ஆணையா் (சபாதி) அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT