தருமபுரி

பழைய தருமபுரியில் ரூ.30.47 லட்சத்தில் பள்ளிக் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

DIN

தருமபுரி அருகே பழைய தருமபுரியில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.30.47 லட்சத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வேலூா் மாவட்டம், காட்பாடியில் க.அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதையொட்டி 36 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள் கட்டும் பணிக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

இதையொட்டி, தருமபுரி அருகே பழைய தருமபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ரூ. 30.47 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணியினை ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மான்விழி, வட்டாட்சியா் தன.ராஜராஜன், தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கணேசன், தனபால், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT