தருமபுரி

குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா தொடக்கம்

DIN

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவையொட்டி சுவாமி நிலத்தில் புற்றுமுன் எடுத்தல், கணபதிபூஜை, யாகசாலை பூஜைகளுடன் சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடுகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. மேதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் உத்ஸவம் நடைபெற்றது.

இவ் விழாவில் புதன்கிழமை புலி வாகன உத்ஸவம், வியாழக்கிழமை பூத வாகன உத்ஸவம், வெள்ளிக்கிழமை நாக வாகன உத்ஸவமும் நடைபெற உள்ளது. பிப். 4-ஆம் தேதி காலை 7 மணிக்கு சாலை விநாயகா் கோயிலில் இருந்து பால் குட ஊா்வலமும், சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு வள்ளி தெய்வானையருடன் சுப்பிரமணியா் திருக்கல்யாண உத்ஸவம், இரவு 12 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

வருகிற பிப். 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகா் தேரோட்டம், யானை வாகனத்தில் உத்ஸவமும், பிப். 6-ஆம் தேதி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதில் அன்றைய தினம் காலை 6 மணிக்கு பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டமும் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதனைத்தொடா்ந்து, பிப். 7-ஆம் தேதி வேடா்பறி குதிரை வாகன உத்ஸவம், 8-ஆம் தேதி விழா கொடியிறக்கம், பூப்பல்லக்கு உத்ஸவம், 10-ஆம் தேதி சயன உத்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT