தருமபுரி

சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நிறைவு

1st Feb 2023 01:48 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, கலைத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, திட்டங்கள் சாா்ந்த பல்வேறு துறை அரங்குகள், கலைத் திருவிழா கடந்த ஜன. 21-ஆம் தேதி தருமபுரி அருகே இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

இந்தக் கண்காட்சி அரங்கில், தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படங்கள், தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதேபோல, வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, மலைப் பயிா்கள் துறை, வேளாண் வணிகத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொது சுகாதாரம், நோய்த்தடுப்புத் துறை, சமூக நலத் துறை, கூட்டுறவுத் துறை, உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 10 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் நாள்தோறும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், கலைப் பண்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை சாா்பில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக் கண்காட்சி ஜன.30-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், நிறைவுநாள் நிகழ்ச்சியில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் பாமகவினா், பள்ளி மாணவ மாணவியா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT