தருமபுரி

பென்னாகரம் பேரூராட்சி கூட்டம்

1st Feb 2023 01:47 AM

ADVERTISEMENT

ஆதி திராவிடா் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் பென்னாகரம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர சிறப்புக் கூட்டத்திற்கு தலைவா் வீரமணி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் கீதா முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில் பென்னாகரம் பேரூராட்சிகளில் உரிமையாள்கள் கட்டடப் பணியின் போது முறையான அனுமதி பெற வேண்டும். ஆதி திராவிடா் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், முள்ளுவாடி ஏரியை 1.79 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, பேரூராட்சிக்கு உள்பட்ட 7 ஆவது வாா்டில் பட்டுனுக்கான தெருவில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து வெற்றிலைக்காரன் தெருவிற்கு குடிநீா் குழாய், சாலை வசதி ஏற்படுத்துதல், 15ஆவது வாா்டு நாகமரை ரோடு முத்தப்பன் வாத்தியாா் தெருவிற்கு சிமென்ட் சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT