தருமபுரி

வனவிலங்குகளால் பயிா்ச் சேதம்:இழப்பீடு வழங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

1st Feb 2023 01:48 AM

ADVERTISEMENT

வனவிலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினா் சோ.அா்ஜுனன் தலைமையில் செவ்வாய்க்கிழமை தருமபுரி அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளா் அ.குமாா் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் காட்டுப் பன்றிகள், யானைகளால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல தொடா்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மீண்டும் அடா்வனத்தில் விட வனத்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் காரணமாக தண்ணீரில் மூழ்கிய பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT