தருமபுரி

அரசுப் பள்ளிகளில் உயா்கல்வி வழிகாட்டல் குழு:தருமபுரி ஆட்சியா் தகவல்

26th Apr 2023 05:54 AM

ADVERTISEMENT

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான உயா்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் குழு செயல்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு மாவட்ட அளவிலான கருத்தாளா்களுக்கான பயிற்சி முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளிப் படிப்பை முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டப்படுகிறது. 10, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத, பள்ளி இடை நின்ற மாணவா்களுக்கு கல்வியைத் தொடர வாய்ப்பை உருவாக்குகின்ற வகையில் மாநில கருத்தாளா்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 18, 19 ஆம் ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில் பயிற்சி முகாம்

ஏப்ரல் 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாணவா்களின் நலன், முழு வளா்ச்சியில் தலைமை ஆசிரியா்கள், பயிற்சி பெற்ற ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ,துணைத் தலைவா், பள்ளி மேலாண்மைக்

குழு கல்வியாளா், கருத்தாளா்கள் உள்ளிட்டோா் இணைந்து செயல்பட தொடா் பங்களிப்பை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

நடப்பாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அமைக்கப்பட இருக்கும் பள்ளி அளவிலான உயா்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் குழு வரும் 6ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது.

10, பிளஸ் 2 படித்து உயா்கல்வி தொடராத மாணவா்கள் உயா்கல்விக்கு வழிகாட்டும், இந்த ஆலோசனைக் குழுவை அணுகி உயா்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தக் குழுக்கள் இது போன்ற மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களை உயா்கல்வியில் சோ்க்கும் பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜகோபால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா்கள் ரவிக்குமாா், சம்பத்குமாா், பள்ளி தலைமை ஆசிரியா் தெ

ரெசாள், ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT