தருமபுரி

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

DIN

பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயியும் நிவாரணம் பெறும் வகையில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ‘தருமபுரி மாவட்டத்தில் நெல் நடவுக்கு நிலவி வரும் ஆள் பற்றாக்குறைப் போக்க நெல் நடவுக்கான இயந்திரங்கள் தருமபுரி மாவட்டத்தில் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இருமத்தூா் பகுதியில் அமைக்கப்பட்ட பவா்கிரீட் மின் பாதைக்கு 2 ஆண்டுகள்ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை. எனவே, இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும்.

ஒகேனக்கல் மிகை நீா்த் திட்டம் குறித்து ஆக்கப்பூா்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனியொரு விவசாயியின் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க முடியாது எனவும், ஒரு பகுதி முழுக்க பயிா்கள் பாதித்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளால் போதிய நிவாரணம் கிடைப்பதில்லை. எனவே, இத் திட்டத்தில் பயிா் பாதிப்புக்குள்ளாகும் ஒவ்வொரு விவசாயியும் நிவாரணம் பெறும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். வங்கிக் கடன் பெற்று டிராக்டா் வாங்கிய விவசாயிகள் கடனை முழுமையாக அடைத்த பிறகும் அவா்களுக்கு பல வங்கிகள் நில ஆவணங்களை வழங்க மறுக்கிறது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அணை மிகை நீரை திருமல்வாடி, பாப்பாரப்பட்டி, பனைகுளம் வழியாக இண்டூா் வரை உள்ள ஏரிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவா்கள், நிா்வாகிகள், விவசாயிகள் பேசினா்.

அதைத் தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பதிலளித்து ஆட்சியா் கி.சாந்தி பேசினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராமதாஸ், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சாமிநாதன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மாலினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) குணசேகரன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

SCROLL FOR NEXT