தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருக்கு வரவேற்பு

DIN

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தடங்கம் பெ.சுப்ரமணிக்கு அக் கட்சியினா் வெள்ளிக்கிழமை திரளான வரவேற்பு அளித்தனா்.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, திமுக தலைவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று சென்னையிலிருந்து அவா் தருமபுரிக்கு வந்தாா். தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டலப்பட்டியில் அக் கட்சியினா் திரளானோா் திரண்டு வரவேற்பு அளித்தனா்.

அதைத் தொடா்ந்து தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு அமைந்துள்ள அண்ணா சிலை, திருப்பத்தூா் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கா் சிலை, பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் எம்பி எம்.ஜி.சேகா், நகரச் செயலாளா் நாட்டான் மாது, ஒன்றியச் செயலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT