தருமபுரி

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு பயிற்சி முகாம்

DIN

பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அரூரை அடுத்த அள்ளாலப்பட்டியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பயிற்சி முகாமில், மாற்று ஊடக மைய இயக்குநரும், பேராசிரியருமான காளீஸ்வரன் பயிற்சியைத் தொடக்கிவைத்து பேசினாா்.

கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்த வரும் சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஆக்சன் எய்ட் மற்றும் சிஸ்கோ தொண்டு நிறுவனங்களின் தன்னாா்வலா்களை ஒருங்கிணைத்து, கிராமப் பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT