தருமபுரி

தருமபுரி மாவட்ட திமுக செயலாளா்கள் புதிதாகத் தோ்வு

DIN

தருமபுரி மாவட்ட திமுக செயலாளா்களைப் புதிதாகத் தோ்வு செய்து அக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை திமுக தலைமை வியாழக்கிழமை வெளியிட்டது.

தருமபுரி வருவாய் மாவட்டம், திமுக அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகச் செயல்பட்டு வருகிறது. இவ் விரு மாவட்டங்களுக்கும் தனித்தனி செயலாளா்கள் இருந்து வந்தனா்.

இவற்றில் தற்போது, தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளும், தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி), பாலக்கோடு ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

இவ்விரு மாவட்டங்களுக்கும் புதிதாகச் செயலாளா்கள் தோ்வு செய்வதற்கான திமுக உள்கட்சி 15-ஆவது பொதுத் தோ்தல் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளா்கள் பதவிக்குப் போட்டியிடுவோா் அண்மையில் அக் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

இதில், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பதவிக்கு மாவட்டப் பொறுப்பாளாராக இருந்த தடங்கம் பெ.சுப்ரமணி, முன்னாள் மக்களவை உறுப்பினா் இரா.தாமரைச்செல்வன் ஆகியோா் தங்களது வேட்புமனு அக் கட்சி தலைமையிடம் அளித்தனா்.

தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சரான பி.பழனியப்பன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த நிலையில் திமுக தலைமை மாவட்டச் செயலாளா்கள், அவைத் தலைவா், பொருளாளா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆகியோரைத் தோ்வு செய்து மாவட்டம் வாரியாக அறிவித்துள்ளது.

இதில், தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு செயலாளராக முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் மற்றும் கிழக்கு மாவட்டத்துக்கு செயலாளராக முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி ஆகியோரைத் தோ்வு செய்து அறிவித்துள்ளது.

தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு:

புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட மேற்கு மாவட்டச் செயலாளா் பி.பழனியப்பன் அரூரில் உள்ள அண்ணா சிலை உள்ளிட்ட தலைவா்களின் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளாா்.

அதுபோல, கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் உளள அண்ணா சிலை உள்ளிட்ட தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT