தருமபுரி

தூத்துக்குடியிலிருந்து தருமபுரிக்கு 1,330 டன் உரம் வந்தடைந்தது

30th Sep 2022 12:35 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் தருமபுரி மாவட்டத்துக்கு 1,330 டன் உர மூட்டைகள் வியாழக்கிழமை வந்தடைந்தன.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் பணிகள் பயன்பாட்டுக்காக, 1,330 டன் காம்ப்ளக்ஸ், டிஏபி, எண்ஏபி ஆகிய உர மூட்டைகள் வரப்பெற்றன. இவற்றை வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) தாம்சன், வேளாண் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு இரண்டு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைத்தனா்.

இதில், தருமபுரி மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 374 டன் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் 108.4 டன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 80 டன் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் 50 டன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியாா் உரக் கடைகளுக்கு 532 டன் காம்ப்ளக்ஸ், 5 டன் டிஏபி, பொட்டாஷ் 102 டன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 25 டன் காம்ப்ளக்ஸ் என பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT