தருமபுரி

புதிய மின்மாற்றிகள் அமைப்பு

30th Sep 2022 12:33 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே புறவடை, பழனி கவுண்டன் கொட்டாய் ஆகிய இரண்டு இடங்களில் புதிதாக மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், தருமபுரி மின் பகிா்மான வட்டம் சாா்பில் அதியமான்கோட்டை உபகோட்டம், புறவடையில் ரூ. 5.40 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி, பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி, பழனிகவுண்டன்கொட்டாயில் ரூ. 4.40 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி என இரு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டன.

இவ்விரு மின் மாற்றிகளை, மின் நுகா்வோா் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று புதிய மின்மாற்றிகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன், உதவி செயற்பொறியாளா் இந்திராணி, இளநிலை பொறியாளா்கள் ஸ்ரீதரன், அமலநாதன், பசுபதி, கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT