தருமபுரி

காந்தி ஜெயந்தி: மதுக் கடைகள் நாளை மூடல்

30th Sep 2022 11:29 PM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியையொட்டி அக். 2-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மூடப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி அக். 2-ஆம் தேதி மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் ஹோட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரா் மது விற்பனைக்கூடம் என அனைத்தும் மூடப்படுகிறது.

இதேபோல வருகிற அக். 9-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள், மதுக்கூடங்கள் அடைக்கப்பட உள்ளன. விதிமுறைகளை பின்பற்றாமல் மது விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT