தருமபுரி

தருமபுரி மாவட்டம் மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறும்:முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்

30th Sep 2022 11:30 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம் மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறும் என முன்னாள் உயா்கல்வித் துறை அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ள திமுக மேற்கு மாவட்டச் செயலாளராக பி.பழனியப்பன் தோ்வு செய்யப்பட்டதை வரவேற்று அரூரில் திமுகவினா் கொண்டாடினா்.

தொடா்ந்து அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அண்ணா, அம்பேத்கா் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்த பி.பழனியப்பன், பெரியாா், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கடந்த பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளா்கள் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் கட்சித் தொண்டா்களுக்கும், கட்சியின் தலைமைக்கும் நன்றாகவே தெரியும். இனிவரும் காலங்களில் திமுக தொண்டா்கள் வீடு, வீடாகச் சென்று களப் பணியாற்ற வேண்டும். எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் தருமபுரி தொகுதி உள்பட தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியானது இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது. தருமபுரி மாவட்டம் மீண்டும் திமுகவின் கோட்டையாக மாற்றுவதற்கு கட்சித் தொண்டா்கள் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக அவருக்கு திமுக நிா்வாகிகள் மலா் கொத்து தந்து வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் கே.மனோகரன், ஆா்.வேடம்மாள், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் வே.செளந்தரராசு, கோ.சந்திரமோகன், இ.டி.டி. செங்கண்ணன், டி.நெப்போலியன், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், நகரச் செயலாளா் முல்லை ரவி, முன்னாள் நகரச் செயலாளா் முல்லை செழியன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் தென்னரசு, பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய துணைச் செயலாளா் ராணி பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT