தருமபுரி

அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

29th Sep 2022 01:28 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை, இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளாா்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான முதுநிலை மற்றும் இளநிலை பாடப்பிரிவுகளில் எம்.ஏ (தமிழ்) எம்.காம் (வணிகவியல் ) எம்.எஸ்.சி (கணினி அறிவியல்), பி.ஏ (ஆங்கிலம்) பி.காம் (வணிகவியல் ), பிஎஸ்சி (கணிதம்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்தக் கலந்தாய்வில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இளங்கலை பாடப்பிரிவுகளில் உள்ள காலியாக இடங்களுக்கான கலந்தாய்வில் இணையவழியாக விண்ணப்பித்த மாணவா்களும், விண்ணப்பிக்காத மாணவா்கள் வியாழக்கிழமை மாலைக்குள் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT