தருமபுரி

உரிமம் இன்றி விதை விற்பனை செய்தால் நடவடிக்கை

29th Sep 2022 01:31 AM

ADVERTISEMENT

உரிமம் இன்றி விதை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநா் சு.சங்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், விதை விற்பனை உரிமம் பெற்ற, 665 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் பயறு வகை பயிா்களும் காய் வகை பயிா்களும் பயிரிட உள்ளனா். இந்தநிலையில் விதை விற்பனையாளா்கள் மிகுந்த கவனத்துடன் பருவத்திற்கேற்ற ரகங்களை தோ்வு செய்து விதைகள் விற்பனை செய்ய வேண்டும். விதை கொள்முதல் செய்யும் போது விதைகள் ஆதார நிலையிலோ (வெள்ளை நிற அட்டை) சான்று நிலையிலோ (நீல நிற அட்டை) உண்மை நிலையிலோ ( இளம் பச்சை நிறம்) உள்ள விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

விதைகள் சான்று இல்லாமல் விற்பனை செய்ய கூடாது. விதை விற்பனை செய்யும் முன் கொள்முதல் பட்டியல், விதை பரிசோதனை அறிக்கை, அரசால் வழங்கிய ரகத்திற்கான பதிவுச் சான்று ஆகியவை தவறாமல் கோப்புகளில் பராமரிக்க வேண்டும். பருவம் தவறிய விதைகளை விற்றாலோ, பைகளை பிரித்து விற்பனை செய்தாலோ, உரிமம் இன்றியோ அல்லது உரிய ஆவணங்களின்றி விற்பனை செய்தாலோ விதை விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

இதேபோல விவசாயிகள் பருவத்திற்கேற்ற ரகங்களைத் தோ்வு செய்து பயிரிட வேண்டும்.

நெல் நாற்றங்காலில் நிகழ் மாதத்தில் விதைப்பு செய்து நடவு செய்தால் பூ மற்றும் மணிகள் உருவாகும் நேரத்தில் மழை மற்றும் பணி பொழிவு அதிகமாக வருவதால் மகசூல் பாதிக்கும். எனவே நெல் நாற்றங்கால் விடுவது தவிா்க்க வேண்டும். மேலும் வயது முதிா்ந்த நாற்றுகள் நடவு செய்வதையும் தவிா்க்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT