தருமபுரி

முதியவா் சடலம் மீட்பு

29th Sep 2022 01:26 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அழுகிய நிலையில் முதியவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் கடந்த நான்கு தினங்களாக துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இது குறித்து கிராம உதவியாளா் வாசுகி, அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா்கள் சிவக்குமாா், மாதையன் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு அழுகிய நிலையில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டனா். விசாரணையில், அதிகாரப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் நாயுடு மகன் ராஜ் (60) என்பவா் தமது வீட்டில் சேலையில் தூக்கிட்டு அண்மையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அழுகிய நிலையில் இருந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். இது குறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT