தருமபுரி

குடிநீா் தட்டுப்பாடு

29th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

கடத்தூரை அடுத்த டி.அய்யம்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சி, டி.அய்யம்பட்டி விநாயகா் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6.5 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இந்த தொட்டியின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்பகுதி மக்களின் நலன்கருதி நீா்த்தேக்க தொட்டியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT