தருமபுரி

பாப்பாரப்பட்டி ஸ்ரீ திருமலை கோபால்சுவாமி திருக்கல்யாணம்

29th Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

பாப்பாரப்பட்டி ஸ்ரீ திருமலை கோபால்சாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட புது கரம்பு பகுதியில் உள்ளது ஸ்ரீ திருமலை கோபால்சாமி கோயில். இந்தக் கோயிலுக்கு பாப்பாரப்பட்டி, பனைக்குளம், மாதேஅள்ளி, சுரக்காய் பட்டி, பென்னாகரம் பாலக்கோடு, பெரியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் இருந்து வாரம்தோறும் சனிக்கிழமை நாட்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கோபாலசுவாமிக்கு வளா்பிறை சித்திரை நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நிகழ் ஆண்டுக்கான திருக்கல்யாணம் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. ஸ்ரீ திருமலை கோபால்சுவாமி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் புதன்கிழமை கோயில் வளாகத்தில் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ திருமலை கோபால்சுவாமி சமேத பத்மாவதி தாயாருக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கங்கை பூஜை, வன்னி மரம் குத்துதல், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT