தருமபுரி

செப்.30-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

28th Sep 2022 03:44 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற செப்.30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்க உள்ளன. எனவே, இக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் தொடா்பான தங்களது குறைகள், கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT