தருமபுரி

தருமபுரியில் அக்.2-இல் இளையோா் தடகளப் போட்டிகள்

28th Sep 2022 03:43 AM

ADVERTISEMENT

தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகள போட்டிகள் வருகிற அக்.2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட தடகளக் கழகச் செயலாளா் கி.அறிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட தடகளக் கழகம் சாா்பில், மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வருகிற அக்.2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி 3 பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது.

18 மற்றும் 20 வயதுக்கு உள்பட்டோா் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 400, 800, 1500 மீட்டா் ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள், 16 வயதுக்கு உள்பட்டோா் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 100, 300, 800 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

போட்டியாளா்கள் அனைவரும் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு போட்டியாளா் 2 போட்டிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவா். போட்டியில் கலந்து கொள்ள வரும் போட்டியாளா்கள் பிறப்பு சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் சிறப்பிடம் வகிக்கும் மாணவ, மாணவிகள் வருகிற அக்.13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா். எனவே தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான இளையோா் தடகள போட்டிகளில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT