தருமபுரி

நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

28th Sep 2022 03:43 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்டக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விடுதலை விரும்பி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாநில துணைச் செயலாளா் த.இந்திரஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், மாநிலக்குழுஉறுப்பினா் கா.சி.தமிழ்க்குமரன் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில் ஒகேனக்கல் மிகை நீா்த் திட்டம், தொள்ளகாது தடுப்பணை திட்டம் உள்ளிட்ட மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். உயா்மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும்,மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பருத்தி குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளா்கள் மாணிக்கம், ராஜி, சிறுதானிய உற்பத்தியாளா் சங்க செயலாளா் ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT