தருமபுரி

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்களுக்குகல்வி உதவித் தொகை

DIN

முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில், 9 முன்னாள் படைவீரா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ. 1.45 லட்சம் கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மொத்தம் 436 மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், முன்னாள் படைவீரரின் வாரிசுதாரரான ஒருவருக்கு ரூ. 25,000 திருமண நிதி உதவி, 7 நபா்களுக்கு ரூ. 1.10 லட்சம் கல்வி உதவித்தொகை, மரணமடைந்த முன்னாள் படைவீரா் உக்கரப்பன் மனைவி கௌரி என்பவருக்கு ரூ. 10,000 நிதி உதவி என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ. 1.45 லட்சம் நிதி உதவிகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாச்சலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வி.ராஜசேகரன், முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் எஸ்.வெங்கடேஸ்வரன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT