தருமபுரி

கோ-ஆப்டெக்ஸில் ரூ.2.20 கோடி தீபாவளி விற்பனை இலக்கு

DIN

தருமபுரி மற்றும் அரூா் கோ-ஆப்டெக்ஸில் நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 2.20 கோடி விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் நிகழாண்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி விற்பனையைத் தொடக்கி வைத்து பேசியதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாள்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவ கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு-2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூா் ஆகிய 2 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் மொத்தம் ரூ. 95.21 லட்சம் மதிப்பில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகைக்கு ரூ. 2 கோடி மற்றும் அரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ. 20 லட்சம் என 2 விற்பனை நிலையங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ. 2.20 கோடி விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எனவே, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அனைத்து தரப்பினரும் ஆடைகளை வாங்கி தீபாவளியைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

விழாவில் கோ-ஆப்டெக்ஸ் சேலம் மண்டல மேலாளா் சு.காங்கேயவேலு, மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ஜெயக்குமாா், தருமபுரி வட்டாட்சியா் தன.ராஜராஜன், நெல்லிக்கனி விற்பனை நிலைய மேலாளா்கள் எல்.ரெஜினா, கு.சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT