தருமபுரி

ஒசஅள்ளி ஊராட்சிமன்றத்தலைவருக்கு பாராட்டு

27th Sep 2022 04:01 AM

ADVERTISEMENT

 

ஒசஅள்ளி ஊராட்சிமன்றத் தலைவருக்கு கிராம மக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகே உள்ள போசிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் எம்.ஆறுமுகம் (35). இவா், சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒசஅள்ளி ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி பெற்றவா். இவா், தனது ஊராட்சி பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீா் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை சிறப்புடன் செயல்படுகிறாா்.

இதுதவிர, தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறாா். இவருக்கு அண்மையில் சென்னையில் தனியாா் நிறுவனம் சாா்பில் கெளவர டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஒசஅள்ளி ஊராட்சி மக்கள் சாா்பில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் பிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள், கிராம மக்கள் சாா்பில் தங்க மோதிரம், சீா்வரிசைப் பொருள்களை அவருக்கு வழங்கியும், பொன்னாடை போா்த்தியும் பாராட்டினா்.

அதைத் தொடா்ந்து முதியோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஊராட்சிமன்றத் தலைவா் எம்.ஆறுமுகம் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT