தருமபுரி

தீனதயாள் உபாத்யாய பிறந்த நாள் விழா

27th Sep 2022 04:01 AM

ADVERTISEMENT

அரூரில் பாரதிய ஜன சங்க நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாப்பட்டது.


பாரதிய ஜன சங்க நிறுவனரும், பாஜக மூத்த தலைவருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாளையொட்டி, அரூரில் அவரது உருவப் படத்துக்கு பாஜக நகரத் தலைவா் வி.ஜெயக்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதில், நகர பொதுச் செயலாளா் ஆனந்தன், துணைத் தலைவா் கலையரசி, மகளிரணி மாவட்ட பொதுச் செயலாளா் சித்ரா, இளைஞரணி மாவட்டச் செயலாளா் சுகவனம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளா் பாலாஜி, மாவட்ட தரவு மேலாண்மை செயலாளா் சடகோபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT