தருமபுரி

நவராத்திரி விழா: வீடுகளில் கொலு வைத்துபெண்கள் சிறப்பு வழிபாடு

27th Sep 2022 04:02 AM

ADVERTISEMENT

 

நவராத்திரி விழாவையொட்டி, தருமபுரி நகரில் பல்வேறு கோயில்கள், வீடுகளில் கொலுவைத்து பெண்கள் வழிபட்டனா்.

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி, ஆனந்த நடராஜா், சென்னகேசவ பெருமாள் மற்றும் துா்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட களிமண் சிலைகள் மற்றும் பொம்மைகளைக் கொண்டு நவராத்திரி கொலு அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதுபோல, தருமபுரி, கோட்டை அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயில் மற்றும் வரமகாலஷ்மி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன.

இவ்விழாவையொட்டி 9 நாள்கள் பல்வேறு வகையான சிறப்பு அலங்கார சேவைகள் நடத்தப்பட உள்ளன. தருமபுரி, நெசவாளா் நகா் ஓம் சக்தி மாரியம்மன் கோயில், வேல்முருகன் கோயில் மற்றும் மகாலிங்கேஸ்வரா் கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரா் கோயில், பாரதிபுரம் மாரியம்மன் கோயில், எஸ்.வி. சாலை விநாயகா் கோயில், ஸ்ரீ அபய ஆஞ்சநேய சுவாமி கோயில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோயில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரா் கோயில் உள்பட தருமபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT