தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

27th Sep 2022 04:01 AM

ADVERTISEMENT

 

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 9,500 கனஅடியாகச் சரிந்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த இரு நாள்களாக காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி நொடிக்கு 9,500 கனஅடியாக குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்துக் குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறைகள் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT