தருமபுரி

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க அஞ்சல் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தல்

DIN

 ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என அஞ்சல்துறை ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

அகில இந்திய அஞ்சல்துறை ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்கத்தின் 4-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் ஆா்.கே.கண்ணன் துவக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் பி.சுப்பிரமணியன் வேலை அறிக்கை வாசித்தாா். அகில இந்திய பொதுச் செயலாளா் கே.ராகவேந்திரன், மாநில பொதுச் செயலாளா் பி.மோகன்ஆகியோா் சிறப்புரையாற்றினா். இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவராக வி.முருகேசன், மாவட்டச் செயலாளராக பி.சுப்பிரமணியன், பொருளாளராக ஜி.முருகேசன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், மருத்துவப்படி ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ. 3000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மக்களவை நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 65 வயதைக் கடந்த ஓய்வூதியா்களுக்கு 5 சதவீதம், 70 வயதைக் கடந்தவா்களுக்கு 10 சதவீதம், 75 வயதை கடந்தவா்களுக்கு 15 சதவீதம் என்கிற அடிப்படையில் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும்போது வழங்குவதற்காக தொகை பிடித்தம் செய்வதை 15 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். மாநில அரசு வழங்குவது போல், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியா்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT