தருமபுரி

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

வார விடுமுறையில் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். வார விடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் பகுதிக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்திருந்தனா்.

அண்மையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட அதிக நீா்வரத்தினால் பிரதான அருவி, சினி அருவி ஆகியவை சேதமடைந்ததால், அருவிகளில் குளிப்பதற்கு தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல், நடைபாதை முகப்பின் முன்பு உள்ள தடுப்புப் பகுதி, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா்.

காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள், சின்னாறு பரிசல் துறையில் 2 மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கி.மீ. தொலைவிற்கு பரிசலில் குடும்பத்தினருடன் உற்சாகப் பயணம் மேற்கொண்டு அருவிகள், பாறை குகைகள் ஆகியவற்றை கண்டு களித்தனா்.

வார விடுமுறை என்பதால் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு காலை முதலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்ததால் மீன் விற்பனை நிலையம், உணவருந்தும் பூங்கா, சிறுவா் பூங்கா, முதலைப்பண்ணை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அவா்கள் வந்த சுற்றுலா வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளில் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டன.

சுற்றுலாப் பயணிகள் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாழை, அரஞ்சான் உள்ளிட்ட மீன் வகைகளை வாங்கி சமைத்து உண்டு மகிழ்ந்தனா். ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையின் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஒகேனக்கல் பிரதான அருவி நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, ஆலாம்பாடி முதலைப்பண்ணை, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT