தருமபுரி

மாத அமாவாசை: நெருப்பூா் முத்தையன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

26th Sep 2022 05:10 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அருகே நெருப்பூா் முத்தையன் கோயிலில் மாத அமாவாசையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

தருமபுரி மாவட்டம், நாகமரை ஊராட்சிக்குள்பட்ட நெருப்பூா் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்தையன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிா்வகித்து வரும் இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த நிலையில் நிகழ் மாத அமாவாசையில் நெருப்பூா் முத்தையன் சுவாமி கோயிலுக்கு காலை முதலே பக்தா்களின் கூட்டம் அதிகரித்தது. கோயிலின் மூலவரான முத்தையன் சுவாமிக்கு தயிா், திருநீறு, மலா்கள், பன்னீா், பழங்கள் உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நெருப்பூா், சேலம், தருமபுரி, பென்னாகரம், செல்லமுடி, மேச்சேரி, கொளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதனைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ நெருப்பூா் முத்தையன் சுவாமி சிலையை, கோயிலை சுற்றி எடுத்து வரும் போது பக்தா்கள் தரையில் படுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT