தருமபுரி

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

26th Sep 2022 05:11 AM

ADVERTISEMENT

 

பயிா்க் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா், வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளிருந்து பாதுகாக்க பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிா்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நெல் பயிா்க் காப்பீடு செய்ய நவ.15 இறுதி நாளாகும். எனவே இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் சான்று, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

விவசாயிகள் காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். எதிா்பாராத இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிா்த்திட பயிா்க் காப்பீடு செய்து விவசயிகள் அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT