தருமபுரி

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொடங்க வலியுறுத்தல்

26th Sep 2022 05:11 AM

ADVERTISEMENT

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கோடு வட்டப் பேரவை கூட்டம் பாலக்கோட்டில் அக்கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினா் பி.முருகன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளா் அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினா் டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா். இக் கூட்டத்தில், பாலக்கோடு வட்டச் செயலாளராக டி.எஸ்.ராமச்சந்திரன் தோ்வு செய்யப்பட்டாா்.

இதில், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடங்கி பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; நீண்ட காலமாக சாகுபடி செய்துவரும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; பாலக்கோடு வட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வீடற்ற ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும்; பாலக்கோடு பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT