தருமபுரி

ரூ. 22.70 லட்சத்தில் புதிய உயா்மின்கோபுர விளக்குகள்

25th Sep 2022 05:31 AM

ADVERTISEMENT

 

தருமபுரி நகரில் ரூ.22.70 லட்சத்தில் புதிய உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன.

தருமபுரி நகரில் மதிகோன்பாளையம் மயானம் அருகே உள்ள மூன்று முனைச்சாலை சந்திப்பு, குமாரசாமிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் மற்றும் பாரதிபுரம் 66 அடி சாலை ஆகிய 3 இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிட்டி யூனியன் வங்கி உதவியுடன் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதேபோல 15-ஆவது மத்திய நிதி ஆணையத் திட்டத்தின் கீழ் பென்னாகரம் சாலை டி.என்.வி. நகா், பாரதிபுரம் கிராண்ட் அவென்யூ நகா் ஆகிய இடங்களில் ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதிய மின் கம்பத்துடன் கூடிய எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த புதிய மின் விளக்குகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து புதிய விளக்குகளை ஒளிர செய்தாா்.

இதில் நகா்மன்றத்துணைத் தலைவா் நித்யா அன்பழகன், ஆணையா் சித்ரா சுகுமாா், நகராட்சிப் பொறியாளா் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலா் ஜெயவா்மன், உதவி பொறியாளா் தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT