தருமபுரி

ஈரோடு மாவட்டத்தில் கொள்ளை சம்பவம்:அரூரில் மூவா் கைது: ரூ. 26 லட்சம் பறிமுதல்

25th Sep 2022 05:32 AM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக அரூரில் மூவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகேயுள்ள கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயி பழனிசாமியின் மகன் முத்துசாமி (68). அண்மையில் இவரது வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள் ரூ. 27 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இது குறித்து விவசாயி முத்துசாமி அளித்த புகாரின் பேரில், பாவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில், தருமபுரி மாவட்டம், அரூா் ஆத்தோர வீதியைச் சோ்ந்த முருகேசனின் மகன் வெங்கடேசன் (25), சந்தைமேடு பகுதியைச் சோ்ந்த சிவாவின் மகன் தமிழ்ச்செல்வன் (27) ஆகிய இருவருக்கும் கொள்ளை சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், கொள்ளையடித்த பணத்தை இவா்களது நண்பா் மணிகண்டன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, மணிகண்டன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 26 லட்சத்தை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT