தருமபுரி

வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்ட மாநாடு

25th Sep 2022 05:31 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க தருமபுரி மாவட்ட 2-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் கே.பசவராஜ் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்டச் செயலா் ஆா்.ரங்கன் வரவேற்றுப் பேசினாா். மாநில பொதுச் செயலா் எஸ்.ரவி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இந்த மாநாட்டில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இயற்கை பேரிடா் காலங்களில் சிறப்பு படிகள் வழங்க வேண்டும்; இரவுக் காவல் பணியை நிறுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT