தருமபுரி

தருமபுரியில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

25th Sep 2022 05:32 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் வைணவைக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி ஏராளமானோா் விரதம் இருந்து வழிபட்டனா். இதையொட்டி தருமபுரி நகரில் கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயில், அதியமான் கோட்டை சென்றாயபெருமாள் கோயில், அதகப்பாடி லட்சுமி நாராயண சுவாமி கோயில், மூக்கனூா் ஆதிமூல வெங்கட்ராமண சுவாமி கோயில் மற்றும் காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.

உழவா் சந்தையில் 36487 கிலோ காய்கறிகள் விற்பனை:

ADVERTISEMENT

தருமபுரி நகரில் உள்ள உழவா் சந்தையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க குவிந்தனா். இதில் பல்வேறு வகையான காய்கறிகள் மொத்தம் 36487 கிலோ விற்பனையானது. இதேபோல 2855 பழங்கள் விற்பனையானது. மொத்தம் 130 விவசாயிகள் 39342 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதேபோல ரூ.13 லட்சத்து 27 ஆயிரத்து 813-க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையா செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT