தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 10 ஆயிரம் கன அடியாக சரிவு

25th Sep 2022 05:32 AM

ADVERTISEMENT

 

கா்நாடக அணையில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

கா்நாடக, கேரள மாநிலங்களில் பெய்து வந்த பருவமழை முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை ஆகியவற்றுக்கு வரும் நீரின் அளவு முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனை அடுத்து கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து நீா்வரத்து குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை நிலவரப்படி 12 ஆயிரம் கன அடியாகவும், பின்னா் மாலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகவும் குறைந்து ததமிழக -கா்நாடக எல்லை வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து சரிந்து, அருவிகளில் அளவாக தண்ணீா் கொட்டி வருகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்த போதிலும் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து நீட்டித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT