தருமபுரி

சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வரின் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டு

DIN

தருமபுரி மாவட்டத்தில், சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வரின் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய 5 காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிறப்பு சிகிச்சை பெற்று, நலம் பெற்ற 5 பயனாளிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டி, 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, காது சிறப்பு சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை உள்ளிட்ட 1016 நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறும் வசதி உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு பரிசோதனைகளையும் இலவசமாக செய்து கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ.63.97 கோடி மதிப்பில் 37,217 நோயாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 3,36,739 குடும்பங்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், அரூா் கோட்டாட்சியா் இரா.விஸ்வநாதன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) ராஜேஷ்கண்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் வி.கிருஷ்ணமூா்த்தி, துணை இயக்குநா்கள் (காசநோய்) ராஜ்குமாா், ஆா்.புவனேஸ்வரி (தொழுநோய்), மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் கே.செந்தில்நாதன், காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT