தருமபுரி

வள்ளல் அதியமான்கோட்டை வளாகத்தில் ரூ.49 லட்சத்தில் நவீன நூலகம்

DIN

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் ரூ. 49 லட்சம் மதிப்பில் நவீன நூலகம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ. 49 லட்சம் மதிப்பில் நவீன நூலகம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாா், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, நவீன நூலகம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தாா். இந்த நவீன நூலகமானது தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் போட்டித் தோ்வுகளுக்கு மாணவ, மாணவியா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் கட்டப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.யசோதா, துணைத் தலைவா் மு.சரஸ்வதி, நல்லம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.மகேஸ்வரி, நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.ஷகிலா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT