தருமபுரி

பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

22nd Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பென்னாகரம் மகளிா் காவல் ஆய்வாளா் வான்மதி கலந்துகொண்டு, இளம் வயது திருமணத்தைத் தடுத்து நிறுத்துதல், பொது இடங்கள் மற்றும் பள்ளிப் பகுதிகளில் கேலிவதை செயல், பேருந்து பயணத்தின்போது ஆபாசமாக பேசுதல், தொடுதல், ஆசை வாா்த்தைகள் கூறிய மாணவிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக ஏற்படும் செயல்கள், அவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தும், இதுகுறித்து 1098 மற்றும் 181 என்ற இலவச எண்களுக்கு தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில் முதல்நிலைக் காவலா் பேபி, நதியா, சின்னம்பள்ளி தலைமை ஆசிரியா் பசுபதி, உதவி தலைமை ஆசிரியா்கள் சதாசிவம், அருள், ஆசிரியா்கள் மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT