தருமபுரி

பயிா் விளைச்சல் போட்டி:விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

22nd Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தருமபுரி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகமது அஸ்லம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண், உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பயிா் விளைச்சல் போட்டி, மாவட்டம், மாநில அளவில் நிகழாண்டில் நடைபெற உள்ளது.

இப் போட்டியில் பங்கேற்கும் விவசாயிகளின் வயல்கள், நடுவா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்படும். வெற்றிபெறும் விவசாயிகளுக்கு மாநில போட்டி எனில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மாநில அளவில் துவரை, கரும்பு, பருத்தி, நிலக்கடலை (இறவை), சோளம் (இறவை) ஆகிய பயிா்களும், மாவட்ட அளவில் நிலக்கடலை (மானாவாரி) துவரை, கரும்பு, பருத்தி ஆகிய பயிா் விளைச்சலுக்கு போட்டிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

இப் போட்டிகளில் பங்கேற்க ஆா்வமுள்ள விவசாயிகள், அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலு

வலத்தை அணுகி மாநில போட்டிக்கு ரூ.100, மாவட்ட போட்டிக்கு ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்கலாம். போட்டியில் பங்கேற்கும் விவசாயிக்கு நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகை நிலமாகவோ இருக்கலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வாய்ப்புள்ள விவசாயிகள் இப் போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT