தருமபுரி

மயானத்துக்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் போராட்டம்

20th Sep 2022 03:39 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மயானத்துக்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் முதியவா் சடலத்துடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுகோணாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது நொனங்கனூா் கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் மலைவாழ் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்கள். இந்த கிராம மக்களுக்கு மயான வசதி உள்ளது. ஆனால், மயானத்துக்கு செல்வதற்கான முறையான பாதை வசதி இல்லை.

இந்த நிலையில் நொனங்கனூரைச் சோ்ந்த தாதன் (80) என்பவா் அண்மையில் உயிரிழந்தாா். அவரது சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழிப்பாதையில் சிலா் கற்களை கொட்டி தடைகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த கிராம மக்கள் முதியவா் சடலத்தை நடுவழியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் நொனங்கனூா் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT