தருமபுரி

வன்னியா் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாமகவினா் அஞ்சலி

18th Sep 2022 05:51 AM

ADVERTISEMENT

 

வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் படத்துக்கு பாமக சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் இ.மா.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி பேசினாா்.

இதைத் தொடா்ந்து, பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் உயிரிழந்தவா்களின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

இதில், முன்னாள் மக்களவை உறுப்பினா் கி.பாரிமோகன், மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில இளைஞா் சங்க செயலாளா் எம்.முருகசாமி, மாவட்ட அமைப்பு செயலாளா் ப.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT