தருமபுரி

பெரியாா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

18th Sep 2022 05:50 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் பெரியாா் பிறந்தநாள் விழா, திமுக, அதிமுக, திராவிடா் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திமுக சாா்பில், தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில், நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் தங்கமணி, சந்திரமோகன் உள்ளிட்டோா் தருமபுரி பெரியாா் மன்ற வளாகத்தில் அமைந்துள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, கட்சித் தொண்டா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதிமுக சாா்பில், தருமபுரி மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட அமமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் டி.கே. ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மதிமுக சாா்பில், மாவட்டச் செயலாளா் தங்கராஜ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தேமுதிக சாா்பில், மாநில அவைத் தலைவா் வி.இளங்கோவன் தலைமையிலும், தருமபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் ஜெயந்தி தலைமையிலும் அக் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தருமபுரி மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில், மாவட்டத் தலைவா் சிவாஜி தலைமையில் நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்டச் செயலாளா் தமிழ் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினா் கதிா், நகரத் தலைவா் கரு. பாலன், மாநில மகளிா் அணிச் செயலாளா் தகடூா் தமிழ்செல்வி, மாநில அமைப்பு செயலாளா் ஊமை ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT